9. புல்லற வியல்பு
ஆவட்டை போன்றறியா தாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க்–
காவிட்(டு) இருமைக்கும் ஏமம் பயவா தனவே தருமத்துப் போலிகள் தாம்.
(பதவுரை)
ஆவட்டை போன்று-மரணமடையு நிலையிலி ருப்பார் போன்று,
அறியாதாரை-அறிவில்லாதவர்களை,
மயக்குறுத்தி - மயக்கி,
பாவிட்டார்க்கு எல்லாம் - விரும்பினவர்களுக்கெல்லாம், படுகுழியாய் - மிக்க துன்பம் பயப்பவாய்,
காவிட்டு - துன்பம் உற்றுழி உதவுதலின்றி,
இருமைக்கும் ஏமம் பயவாதென - இம்மை மறுமைக ளுக்கு உறுதி பயவாதவை யாவை அவை,
தருமத்துப் போலிகள்தாம் - அறநூல்கள் போன்றிருப்பினும் அறநூல்க ளாகா.
(குறிப்பு)
மரண நிலையிலிருப்போர் தன்மையைக் குறித்து 'ஆவட்டை கோவட்டையாயிருக்கிறது' என்று சொல்வது சேர நாட்டிடை வழங்குவதொரு வழக்கு.
மரண நிலையிலிருப்பார் அறிவிலிகள்.
மனத்தில் குழப்பத்தினை யுண்டாக்குபவர் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.
ஆவட்டை ஒரு பூண்டுமாம் துன்பம் உற்றுழி உதவுதலாவது சேற்றுநிலத்தி லியங்குவார்க்கு ஊன்று கோல் போன்று உதவுதல்.
இம்மை மறுமைகட் குறுதி களாவன புகழ் இன்பங்கள் 'பயவாவெனவே' என்பதூ உம் பாடம்;
பொருந்தாமையை ஆராய்ந்தறிக.
பாவிட்டார்-பாவிடு: பகுதி;
இடு: துணை வினை. பாவி - கருது, விரும்பு.
9. The Nature of False Piety
Like the dying cow,
They deceive the ignorant
And become a deep pit of suffering
To those who trust them.
They bring no aid
In times of trouble,
Nor do they offer any certainty
For this world or the next.
They are merely false pieties,
Though they appear as sacred texts,
Yet they are not truly so.
(Explanatory Note):
"Like the dying cow" refers to a local idiom in the Chera country describing the nature of those at death's door. Such people are considered ignorant and cause confusion in the minds of others. "Auvattai" is said to be a type of weed, implying they provide no real support—just as a stake is given to those struggling in the mud. "Certainty for this world or the next" refers to the fact that these false teachings provide no real benefit in this life or the hereafter. "Paavittaar" refers to those who desire or seek them.
९. पाखंडियों का स्वभाव
मरते हुए पशु के समान वे
अज्ञानी लोगों को भ्रम में डालते हैं।
जिन्होंने उन पर भरोसा किया,
उनके लिए ये दुख का गड्ढा बन जाते हैं।
जब दुख आता है, तब ये सहायता नहीं करते।
न तो इस लोक में और न ही परलोक में
ये कोई ठोस आधार प्रदान करते हैं।
ये सब धर्म के नाम पर पाखंडी हैं—
धर्मग्रंथों के समान दिखते हैं,
पर वे असली धर्मग्रंथ नहीं हैं।
"मरते हुए पशु के समान" — यह कहावत चेर देश में प्रचलित है, जो मृत्यु के निकट व्यक्ति के स्वभाव को बताती है। ऐसे लोग अज्ञानी होते हैं और दूसरों के मन में भ्रम पैदा करते हैं। "आवत्तै" एक प्रकार की घास होती है। ये दुख के समय कोई मदद नहीं करते, जैसे कीचड़ में फंसे व्यक्ति को छड़ी का सहारा मिलना। "इम्मै मरुमै" — इस लोक और परलोक में स्थिरता प्रदान नहीं करते। "पाविट्टार" — वे लोग जो उन पर विश्वास रखते हैं या उन्हें चाहते हैं। ये दिखने में धर्मग्रंथ जैसे लग सकते हैं, पर वे वास्तव में धर्मग्रंथ नहीं हैं।
Beautiful
ReplyDelete