அறம் பத்தாவன

 

12. அறம் பத்தாவன


மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம்
செம்மையொன் றின்மை துறவுடைமை--நன்மை
திறம்பா விரதந் தரித்தலோ டின்ன
அறம்பத்தும் ஆன்ற குணம்.
(பதவுரை) மெய்ம்மை-உண்மையும், பெறையுடைமை- பொறுமையும், மேன்மை-பெருமையும், தவம்-தவமும், அடக்கம்-அடக்கமும், செம்மை-நடுநிலைமையும், ஒன்றின்மை-தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும், துறவுடைமை-பற்றுவிடுதலும், நன்மை-நல்லன செய்தலும், திறம்பா விரதம் தரித்தலோடு-மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலுமாகிய, இன்ன அறம் பத்தும்-இவ்வறங்கள் பத்தும், ஆன்ற குணம்-மேலான குணங்களாம்.

(குறிப்பு) ஒன்றின்மை-தனக்கென வொன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தல். திறம்பா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (12)


https://www.tamilvu.org/ta/library-l6190-html-l6190ind-145821

Comments

  1. 🔹 Verse 12 – The Tenfold Virtues of Dharma
    (அறம் பத்தாவன – “Ten Are the Forms of Righteousness”)

    Truth, patience, greatness, austerity, self-control,
    Impartiality, detachment, renunciation,
    Doing good, and steadfastness in vows—
    These ten virtues are the essence of noble character

    ReplyDelete
  2. 🌼 The Ten Pillars of Dharma 🌼
    To walk the path the wise have known,
    Begin with truth, in heart full-grown.
    Let patience be your guiding flame,
    And greatness earned, not claimed by name.

    Let penance shape the inner fire,
    And self-restraint lift you higher.
    With fairness treat both friend and foe,
    No "mine" or "thine" in what you sow.

    Let go of grasp, be free within,
    Renounce the pride, the praise, the sin.
    Do good with neither boast nor pride,
    And let your vows in strength abide.

    These ten alone—so sages teach—
    Make Dharma’s peak within your reach.
    They form the soul of one who stands
    With virtue pure and stainless hands.

    ReplyDelete

Post a Comment