முனைப்பாடியர் இயற்றிய
அறநெறிச்சாரம்
திரு ஆ பொன்னுசாமிப் பிள்ளை உரை
4. அறமுரைப்பவன் இயல்பு
அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.
(பதவுரை)
அறம் கேட்டு-அற நூல்கள் பலவுங் கேட்டவனாயும்,
அருள் புரிந்து-அருளுடையவனாயும்,
ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது-
ஐம்பொறிகளால் நுகரப்படும்
இன்பங்களை விரும்பாதவனாயும்,
இருசார் பொருளும் துறந்து-
அகப்பற்றுப் புறப்பற்றுகளை விட்டவனாயும்,
அடங்கி-அடக்கமுடையவனாயும்;
மன் உயிர்க்கு-நிலைபெற்ற உயிர்களுக்கு,
உய்ந்துபோம் வாயில்-
வீடுபேற்றுக்குரிய வழியினை,
உரைப்பானேல் -
உரைப்பவன் ஒருவனுளனாயின்,
பன்னுதற்குப் பாற்பட்டவன்-
அவன் அறமுரைத்தற்கு உரியவனாவன்.
(குறிப்பு)
சார்-பற்று. மன்னுதல்-நிலைபெறுதல்.
பால்- உரிமை.
இதனால், அறமுரைப்பவன் தன்மை விரித்துக் கூறப்பட்டது.
அற நூல்களை அறமென்றது ஆகுபெயர்.
பன்னுதல்-விளக்கிச் சொல்லுதல்.
ஐம்பலன்கள்-சுவை; ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். (4)
4. The Nature of One Who Preaches Virtue
Translation:
Even if one has heard many texts on virtue,
Is compassionate,
Unmoved by the pleasures of the five senses,
Has renounced both internal and external attachments,
And is disciplined —
If he explains the path to liberation
To beings grounded in worldly life,
Then he alone is truly qualified
To expound on virtue.
Word-by-word meaning (Gloss):
-
அறம் கேட்டு – Though one has heard many scriptures on virtue,
-
அருள் புரிந்து – And is full of compassion,
-
ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது – Unmoved by sensory pleasures (sight, sound, smell, taste, touch),
-
இருசார் பொருளும் துறந்து – Having renounced both internal (emotional) and external (material) attachments,
-
அடங்கி – Being disciplined,
-
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – If he reveals to worldly beings the path to salvation (liberation),
-
பன்னுதற்குப் பாற்பட்டவன் – Then he alone is worthy to explain virtue.
Note:
This verse elaborates on the true qualities of one who is fit to teach virtue. Merely knowing the scriptures or being compassionate is not enough — detachment, discipline, and active guidance to others on the path to liberation are essential traits.
Comments
Post a Comment