6. அறங்கேட்டற்குரியா னியல்பு

 

6. அறங்கேட்டற்குரியா னியல்பு

  தடுமாற்ற மஞ்சுவான் தன்னை யுவர்ப்பான்
  வடுமாற்ற மஞ்சித்தற் காப்பான்-படுமாற்றால்
  ஒப்புரவு செய்தாண் டுறுதிச்சொல் சேர்பவன்
  தக்கான் தரும உரைக்கு.
(பதவுரை) தடுமாற்றம் அஞ்சுவான்-தன் சோர்வு படுதலுக்கு அஞ்சுபவனும், தன்னை உவர்ப்பான் - பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும், வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான்-பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும், படும் ஆற்றால் ஒப்புரவு செய்து-தன்னால் இயன்றவளவு பிறருக்கு உதவிசெய்து, ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் - அந்நிலையிற் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன், தரும உரைக்குத் தக்கான்-அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.

(குறிப்பு) அஞ்சுவான்,உவர்ப்பான்,காப்பான்,சேர்பவன் வினை
யாலணையும் பெயர்கள். ஒப்புரவு-  யாவர்க்கும்ஒருபடித்தாய் உதவி செய்தல்.      (6
(courtesy: https://www.tamilvu.org/library/l6190/html/l6190ind.htm )


6. One Who Is Fit to Hear the Teachings of Righteousness

One who fears mistakes—he fears falling into error;
One who dislikes praise from others—he rejects flattery;
One who guards himself, fearing blame—he takes care to avoid wrongdoing;
One who helps others as much as he can—he willingly renders help;
One who listens to the words of the wise—he listens to those in authority and follows their guidance:
Such a person is fit to hear the teachings of righteousness.

Comments